திருப்புகழ் பயில்வோன் USAGE


திருப்புகழ் பயில்வோன் 1.0

முன்னுரை

திருப்புகழ் முருகபெருமான் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.

பதிப்புரிமை, உள்ளடக்கம், பொறுப்பு மறுப்பு

முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய இத்திருப்புகழ் ,வாக்கு, ஓலை , காகிதம், கணினி, கைபேசி என பல்வேறு உருகொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கின்றது. அவ்வகைஉருமாற்றமடைய முருகபெருமான் அருணகிரியார் தொடங்கி இன்றைய தொழில்னுட்ப நிருவனங்களும் இணையங்களும் செவ்வனே செய்கின்றன. அவற்றில் சில koumaram.com, tamilvu.org, Projectmadurai, shaivam.org, Google போன்றவை இச்செயலி உருவாக அடிப்படைகாரணமாகும். எல்லா சிறப்புகளும் பொறுப்புகளும் அவர்களையே சாரும். செயலியாக்கியோர்க்கு இதன் வடிவும், அமைப்பும்,இயக்கும் பாணி மட்டுமே பொறுப்பு. ஆகவே இச்செயலி ஆக்கத்தில் பிழை இருப்பின் பொறுத்தருளி தெரியப்படுத்தவும். நன்றி

நோக்கம்

கைபேசி உள்ளோரிடம் திருப்புகழை கொண்டுசேர்ப்பதே இதன் பலன். கூடவே சற்று எளிய உபயோகத்திற்காவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் உட்கொண்டது, இணையம் தேவையில்லை .

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. இச்செயலி இலவச தனினபர் வியாபாரமற்ற பயன்பாட்டுக்கானது.
2. பிழைகள் இருக்கக்கூடும்.
3.குழந்தைகளுக்கானதல்ல.
4. விளம்பரம் உள்ளடங்கியது.
5.பயனாளர் இவற்றை ஏற்றபின் , இச்செயலியை உபயோகிக்கலாம்.

உபயோகமுறை

திருப்புகழ் பயில்வோன் 'TAB' வடிவில் ஆக்கப்பட்டுள்ளது. தொடங்கும்போது ,நிபந்தனைகளை ஏற்றபின் திருப்புகழ் பாடல் முதல்வரி அட்டவணையாக தருகிறது. அதில் பாடல் எண், ஊர், ராகம்,தாளம் (இருப்பின்) மற்றும் இசை குறியீடு வலத்தில் உள்ளது. * இசைக்குறியீடு ஒலிவடிவில் உள்ளதா எனக்காட்டும்.இது சோதனை முயற்சி ,இணையம் தேவை !
அட்டவணையில் ஒன்றை சொடுக்கினால் ,அடுத்த பக்கத்தில் பாடல்,விளக்கம் மற்றும் ஒலி வடிவம் தோன்றும்.
அகர வரிசை, ஊர் வரிசை பாடல்களும் தனியே 2 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஒருஉபயோகத்திற்கு 1 விளம்பரம் என அமைக்கப்பட்டுள்ளது . பயனர் விரும்பினால் ,மெனுவிலுள்ள 'விளம்பரம் ' சொடுக்கி முன்கூட்டியே adfree ஆக்கலாம்.

மேம்பாடுகள்

எதிர்வரும் பதிப்புகளில் 1.பாடலை மற்றோருக்கு பகிரல் 2. வார்த்தை தேடல் இடம்பெறும் !

மற்றவை

மற்ற செயலிகள் பயனரின் கவனத்திற்கு !

Popular posts from this blog

Privacy Policy - Sathiyam2k Sanskrit Apps

Sabdakosha Light - SLight Privacy Policy

Sanskrit words for English - Policy and Usage